மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் சிக்கினர்
பரவை மார்க்கெட்டில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் சிக்கினர்.
மதுரை பொன்மேனி மெயின் ரோடு காந்திஜி தெரு தங்கராமன் (வயது 65). இவர் பரவை மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் மார்க்கெட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதே போன்று விளாச்சேரி வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த ஆலிகான், செல்லூர் ஜீவாநகரை சேர்ந்தவர் ராஜபாண்டி, விளாங்குடி செந்தில்குமார் (35) ஆகியோர் மோட்டார் சைக்கிளும் பரவை மார்க்கெட்டில் திருடு போனது. இது குறித்து அவர்கள் 4 பேரும் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அதில் மோட்டார் சைக்கிளை திருடியவர்களின் 2 பேர் அடையாளம் தெரிந்தது. அதன் மூலம் வாடிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ஜெகன் (26), அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் (31) என்பதும், அவர்கள் தான் 4 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.