ஆடு திருட்டு சம்பவத்தில் சிறுவன் உள்பட 2 பேர் கைது

ஆடு திருட்டு சம்பவத்தில் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள சொரியம்பட்டியை சேர்ந்தவர் சங்கர்(வயது 47). நேற்று அதிகாலை இவரது வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது 2 ஆடுகளை 3 பேர் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தப்பிச்செல்ல முயன்றபோது, அவர்களைப் பிடித்து வளநாடு போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கவிநாரிப்பட்டியை சேர்ந்த கார்த்திக்(வயது 19), மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச் சென்ற கவிநாரிப்பட்டியைச் சேர்ந்த பாண்டி, பொன்னுச்சாமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை தேடிவருகின்றனர்.