புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாலங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜன் மகன் தர்மராஜ் (வயது 38) மற்றும் தெற்கு தோப்புப்பட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி தவமணி (36) ஆகிய 2 பேரும் அவர்களது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story