தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி


தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:45 PM GMT)

வெவ்வேறு விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கடலூர்

வடலூர்

வடலூர் ஆபத்தாரனபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன்(வயது 73). வடலூர் நெய்சர் கம்பனியில் ஓய்வு பெற்ற ஊழியரான இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக தனது காரில் அழைத்துக்கொண்டு வடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர்களை பஸ்சில் ஏற்றிவிட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டார். வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே சாலையில் வந்தபோது எதிரே வந்த லாரியும் சந்திரமோகன் ஓட்டி வந்த காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் வழியிலேயே சந்திரமோகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் சிவன் கோவில் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story
  • chat