மது விற்ற 2 பேர் கைது
மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்ைத அடுத்த கல்லாத்தூர் வடவீக்கம் பஸ் நிறுத்தம், சூரியமணல் பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனச்செல்வன், நடேசன் ஆகியோர் அந்தந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடவீக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வடவீக்கம் கைகாட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(55) என்பதும், அவர் பதுக்கி வைத்து மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் சூரியமணல் வடக்கு தெருவில் பதுக்கி வைத்து மது விற்ற சின்னதுரையை(55) கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.