மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியம், ஆவூர், மாத்தூர், பேராம்பூர் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நடத்தி வரும் ஓட்டல் மற்றும் பெட்டிக்கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது ஆவூர் டாஸ்மாக் கடை அருகே ஓட்டல் என்ற பெயரில் கடை நடத்தி வந்த திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த சங்கர் (வயது 44) என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல மாத்தூர் டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடையில் வைத்து மதுபாட்டில்களை விற்ற திருமயத்தை சேர்ந்த இளையராஜா (38) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story