மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x

மது விற்ற 2 பேர் கைது

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை முருகேசபுரம் டாஸ்மாக் கடை அருகில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த இடைச்சிவிளை மணிகண்டன் (வயது 32), செல்வமருதூர் மாணிக்கவாத்தியார் தெரு தினகர் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மதுபாட்டில்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுக்கள், ரூ.150-ஐ பறிமுதல் செய்தனர்.


Next Story