வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற 2 பேர் கைது


வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற 2 பேர் கைது
x

வேலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வேலூரை அடுத்த சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்தியமங்கலத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 43) மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். லோகநாதன் வீட்டில் இருந்து 82 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று அதேபகுதியில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த ஜெயக்குமாரையும் (40) போலீசார் கைது செய்தனர். அவருடைய வீட்டில் இருந்து 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story