திருவொற்றியூர் அருகே மது விற்ற 2 பேர் கைது


திருவொற்றியூர் அருகே  மது விற்ற 2 பேர் கைது
x

திருவொற்றியூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளல் பச்சையப்பன் தெரு சந்து பகுதி, ராஜாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக சின்ன காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் மூங்கில் மண்டபம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வள்ளல் பச்சையப்பன் தெருவை சேர்ந்த எல்லப்பன் (43), அவரது மாமியார் பார்வதி (56) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது, மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story