திருத்தணியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது


திருத்தணியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
x

திருத்தணியில் பட்டா கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி பகுதியில் சிலர் சைக்கிள் செயின், பட்டா கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகவும் பொதுமக்களை மிரட்டும் வகையில் இளைஞர்கள் செயல்பட்டு வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று திருத்தணி பெரியார்நகர், நேரு நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியார்நகர் பகுதியில் கத்தி, அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெரியார்நகர் சேர்ந்த சந்தோஷ்பாபு (வயது 23), லட்சுமணன் (25) என தெரிய வந்தது. மேலும் இவர்கள் மீது திருத்தணி தாலுக்காவில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் திருட்டு வழக்குகள் இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து திருத்தணி போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story