பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேர் கைது


பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேர் கைது
x

பெண் கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை கோர்ட்டு வளாகத்தில் மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை கோயம்பேடு, வடக்கு மாட வீதியைச்சேர்ந்தவர் குருநாத பாண்டியன் (வயது 57). பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், இவர் கடந்த 28-ந் தேதி பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகிளா கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். சாட்சி சொல்லிவிட்டு வெளியில் வந்த அவரிடம், கோர்ட்டு வளாகத்தில் வைத்து 2 பேர், "இனிமேல் சாட்சி சொல்ல வந்தால், உன்னை தீர்த்துக்கட்டி விடுவோம்" என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து குருநாதபாண்டியன், பெரியமேடு போலீசில் புகார் அளித்தார். துணை கமிஷனர் கோபிநாத் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் அரிக்குமார் மேற்பார்வையில், பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ் (34), மோகன் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.


Next Story