விழுப்புரம் அருகே பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்


விழுப்புரம் அருகே பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
x

காலை 9.15 மணி ஆகியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் கலெக்டர் பழனி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக விழுப்புரம் அருகே கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை 9.15 மணி ஆகியும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் கலெக்டர் பழனி, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இந்த நிலையில் தற்போது பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் இருவரை பணியிட மாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



Next Story