தகாத உறவை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் - தம்பியை கொலை செய்த 2 சகோதரிகள்


தகாத உறவை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் - தம்பியை கொலை செய்த 2 சகோதரிகள்
x

சொத்து மற்றும் தகாத உறவு விவகாரத்தில் தம்பியை கொலை செய்து, உடலை கிணற்றில் வீசிய 2 சகோதரிகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியை சேர்ந்தவர் ராமன். 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இறந்து நிலையில் கிடந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் இருந்து ராமனின் உடலை மீட்டனர்.

துர்நாற்றம் அதிகமாக வீசவே ராமனின் இறப்பில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சொத்து மற்றும் தகாத உறவை தட்டிக் கேட்டதால், உறவினர்களே அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய சகோதரிகள் அம்மணி, சின்னக்கரந்தி, கார்த்திக் ராஜா மற்றும் குணசேகரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story