தொடர் கனமழை: நீலகிரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை


தொடர் கனமழை: நீலகிரி சென்ற தேசிய பேரிடர் மீட்பு படை
x

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 2 குழுவாக தயார் நிலையில் உள்ளனர்

கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக கூடலூர், பந்தலூரில் அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது. ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மின்தடை ஏற்பட்டு மக்கள் இருளில் தவிக்கும் நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையில், பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் 160 பேர் கூடலூருக்கு சென்றுள்ளனர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (சனிக்கிழமை) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு 2 குழுவாக பிரித்து அனுப்பப்பட்டனர்.


Next Story