2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது
மதுரையில் வெவ்வேறு இடங்களில் வேனில் கடத்திய 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் வெவ்வேறு இடங்களில் வேனில் கடத்திய 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் கருப்பாயூரணியை அடுத்த கல்மேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 1,440 கிலோ ரேஷன் அரிசி கடத்திக்கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வேனில் இருந்த மதுரையை சேர்ந்த பாண்டி(வயது 30) என்பவரை கைது செய்தனர். மேலும் அரிசி மற்றும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரேஷன் அரிசி பறிமுதல்
பேரையூர் வட்ட வழங்கல் அலுவலர் தங்கபாண்டியன், வருவாய் ஆய்வாளர் சங்கையா, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரதாஸ் ஆகியோர் குடிமை பொருள் தடுப்பு சம்பந்தமாக மங்கள்ரேவ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அத்திபட்டி-மங்கள்ரேவ் சாலையில் வந்த மினி வேன் ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 960 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. உடனடியாக ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த மினி வேனையும் பறிமுதல் செய்தனர். வேனில் வந்த 3 பேர் தப்பி ஓடி விட்டனர். இந்த 2 சம்பவங்களில் 2¼டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.