சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து


சேலம் வழியாக இயக்கப்படும்  2 ரெயில்கள் ரத்து
x
சேலம்

சூரமங்கலம்,

சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 5 ரெயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.

ரெயில்கள் ரத்து

ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே லெவல் கிராசிங்கிற்கு பதிலாக சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கீழ்கண்ட ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம், கரூர் வழியாக செல்லும் ஹுப்ளி- தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரெயில் (07325) நேற்று ஹூப்ளியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ரெயில் மறுமார்க்கத்தில் நாளை (வியாழக்கிழமை) தஞ்சாவூரில் ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுபாதையில்...

மேலும் பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (12684) நாளை பெங்களூரு - சேலம் இடையே ஓசூர், தர்மபுரி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் செல்லாது.

பெங்களூரு - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16526) நாளை மற்றும் 14, 21, 24 ஆகிய தேதிகளில் பெங்களூரு கண்டோன்மெண்ட் - சேலம் இடையே மாற்று பாதையான ஓசூர், தர்மபுரி வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், ஒயிட் பீல்டு, பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர் செல்லாது.

கோவை கொங்கு எக்ஸ்பிரஸ்

ஹஜ்ரத் நிஜாமுதீன் - கோவை கொங்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (12648) தானே- சேலம் இடையே மாற்று பாதையான கடப்பா, ரேணிகுண்டா, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் அனந்தபூர், தர்மாவரம், இந்துப்பூர், யெலங்கா, கிருஷ்ணராஜபுரத்தில் 14, 21-ந் தேதிகளில் நின்று செல்லாது.

கொச்சுவேலி - ஹுப்ளி எக்ஸ்பிரஸ் ரெயில் (12778) வருகிற 14, 21 ஆகிய தேதிகளில் சேலம்- பனஸ்வாடி இடையே ஓசூர், பையப்பனஹள்ளி வழியாக செல்லும். இந்த ரெயில் பங்காருபேட்டை செல்லாது.

கோவை - ஹசரத் நிஜாமுதீன் கொங்கு எக்ஸ்பிரஸ் (12647) வருகிற 24-ந் தேதி ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா வழியாக செல்லும். இந்த ரெயில் கிருஷ்ணராஜபுரம், யெலங்கா, இந்தூர், தர்மாவரம், அனந்தபூர் செல்லாது.

இத் தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story