விவசாயிக்கு 2 ஆண்டு ஜெயில்
விவசாயிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு கரிசல்குளத்தை சேர்ந்தவர் பழனி. விவசாயி. விலங்குகள் வயல் பகுதியில் நுழையாத வண்ணம் இவர் மின்வேலி அமைத்து இருந்தார். சம்பவத்தன்று அந்த மின்வேலியில் முத்துப்பாண்டி (வயது26) என்பவர் சிக்கி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து பழனிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story