அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே 20 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது


அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே 20 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது
x

அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே 20 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர்

ஆவடி அடுத்த அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே 2 பேர் கஞ்சா கடத்துவதாக வந்த தகவலை அடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று அண்ணனூர் ரெயில் நிலையம் அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது 2 மூட்டைகளில் கஞ்சா கடத்திய 2 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த கவிராஜ் (வயது 24) மற்றும் அஜித்குமார் (25) என்பது தெரிந்தது. வெளி மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிந்தது.

மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடத்தில் இருந்து சுமார் 20 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story