பெண்ணிடம் 2¼ பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 2¼ பவுன் சங்கிலி பறிப்பு
x

பெண்ணிடம் 2¼ பவுன் சங்கிலி பறிப்பு

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை:

அம்மாப்பேட்டை சங்கரதேவன் குடிகாடு, எழில் நகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உமாராணி (வயது 58). சம்பவத்தன்று இவர் பஸ்சில் தஞ்சைக்கு சென்றுவிட்டு பூண்டி பஸ்நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் உமாராணியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் கிடந்த 2¼ பவுன் சங்கலியை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story