கார் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு


கார் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு
x
தினத்தந்தி 28 Sept 2023 2:30 AM IST (Updated: 28 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கார் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை சிங்காநல்லூர் நஞ்சப்பாநகரை சேர்ந்தவர் ஆர்.எம்.கவுதம்ராஜ். இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், நான் ரூ.10 லட்சம் செலவில் கார் வாங்கி இருந்தேன். அந்த காரில் கடந்த 3.4.2020 அன்று தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க கோவில்பட்டி நோக்கி சென்றேன். அப்போது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தின்போது எனது காரில் ஏர்பேக் திறக்கவில்லை. இதற்கு காரின் தொழில்நுட்ப கோளாறே காரணம். மேலும் கார் சேதம் அடைந்தது உள்ளிட்டவற்றுக்கு முறையான இன்சூரன்ஸ் தொகை உள்ளிட்ட எந்த சேவையும் சரியாக செய்து தரப்படவில்லை. எனவே உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேல், விபத்தின்போது ஏர் பேக் திறக்காததற்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கார் உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.


Next Story