2,000 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை
2,000 பெண்களுக்கு மைச்சர் துரைமுருகன் மகளிர் உரிமைத்தொகை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி வரவேற்றார்.
இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சுமார் 2,000 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார். அப்போது இந்த பகுதிக்கு ஒரு மகளிர் கல்லூரியும், மருத்துவமனையும் தேவைப்படுகிறது. இதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன். எனவே, பொதுமக்களும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ப.கார்த்திகேயன், அமலு விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி ஆணையாளர் பி.ரத்தினசாமி, மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஒன்றியக் குழு தலைவர்கள் கே.வி.குப்பம் லோ.ரவிச்சந்திரன், காட்பாடி வேல்முருகன், பேரணாம்பட்டு சித்ரா ஜனார்த்தனன், குடியாத்தம் சத்தியாநந்தம், திவ்யா கமல்பிரசாத், பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன், தாசில்தார் அ.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா.சதீஷ்குமார், த.கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.