சந்திமறித்தம்மன் கோவிலில் 2,008 திருவிளக்கு பூஜை
தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவிலில் 2,008 திருவிளக்கு பூஜை நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை தச்சநல்லூரில் உள்ள சந்திமறித்தம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தச்சநல்லூர் ஜோதி வழிபாட்டு அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் 35-வது ஆண்டு 2,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் தச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள், சிறுமிகள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு சந்திமறித்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு தச்சநல்லூர் சாலை வழியாக செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் ஜோதி வழிபாட்டு அய்யப்ப பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story