ஜெயலலிதாவை கொன்றதாக குற்றச்சாட்டு: ‘‘தீபாவுக்கு தைரியம் இருந்தால் புகார் கொடுக்கட்டும்’’; தீபக் பரபரப்பு பேட்டி
சென்னை போயஸ் கார்டனில் ஜெ.தீபா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘‘ஜெயலலிதாவை, சசிகலா குடும்பத்துடன் சேர்ந்து தீபக் கொன்று விட்டான்’, என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
சென்னை,
ஜெ.தீபாவின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தீபக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு தீபாவை மட்டும் தான் நான் அழைத்தேன். ராஜாவை நான் அழைக்கவே இல்லை. போயஸ் கார்டன் இல்லத்திற்கு தீபா வந்தார், நிம்மதியாகத்தான் எல்லாமே நடந்தது. ஆனால் போயஸ் கார்டனில் தாக்கப்பட்டதாக தீபா புகார் கூறி இருக்கிறார்.
சசிகலா குடும்பத்துடன் சேர்ந்து என் அத்தையை கொன்று விட்டதாக என் மீது தீபா குற்றச்சாட்டு கூறியிருக்கிறார். ஜெயலலிதா இறந்து இத்தனை மாதம் கழித்து இந்த குற்றச்சாட்டை அவர் எழுப்ப காரணம் என்ன? என்பது பற்றி எனக்கு தெரியாது. இருந்தாலும் தைரியம் இருந்தால் இதுதொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் தீபா புகார் கொடுக்கட்டும். அதுதான் நல்ல முடிவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story