நாகை, கடலூர் மாவட்டங்களில் ‘பெட்ரோ கெமிக்கல்’ மண்டலம் அறிவித்ததை எதிர்த்து வழக்கு


நாகை, கடலூர் மாவட்டங்களில் ‘பெட்ரோ கெமிக்கல்’ மண்டலம் அறிவித்ததை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2017 4:15 AM IST (Updated: 6 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டில், பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் நிர்வாகி சுந்தர்ராஜன் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ‘பெட்ரோ கெமிக்கல்’ மண்டலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்காக 45 கிராமங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அதுபோல, கடந்த ஜூன் மாதம் இக்கிராமங்களை ‘பெட்ரோ கெமிக்கல்’ மண்டலமாக அறிவித்து தமிழக அரசும் ஆரம்பகட்ட ஆய்வுக்காக அனுமதியளித்துள்ளது. ஆனால் இதுதொடர்பான அறிவிப்பாணை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களால் அந்த திட்டம் குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை. தங்களது கருத்துகளை தெரிவிக்க முடியவில்லை. இந்த திட்டம் இயற்கைக்கு எதிரானது ஆகும். எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story