திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை
திமுக மாவட்ட செயலாளர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென மாவட்டச் செயலாளர்களை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஜெ.அன்பழகன், பி.கே. சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன் பரசன், சுந்தர், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், உதயசூரியன் உள்பட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
முரசொலி பவளவிழா பற்றியும், அதிமுகவின் உட்கட்சி பூசல், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ஸ்டாலின்
ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story