தேவைபட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்- மு.க.ஸ்டாலின்


தேவைபட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 Aug 2017 7:50 AM GMT (Updated: 11 Aug 2017 7:50 AM GMT)

தேவைபட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென மாவட்டச் செயலாளர்களை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் முதன்மை  செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி, முரசொலி செல்வம், மு.க.தமிழரசு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, ஜெ.அன்பழகன், பி.கே. சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன் பரசன், சுந்தர், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், உதயசூரியன் உள்பட 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

 கூட்டம் முடிந்ததும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி, டி.டி.வி. தினகரன் அணி எப்போது வந்ததோ அப்போதே தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை வந்து விட்டது. தமிழகத்தில் மக்கள் இந்த ஆட்சியில் துயரத்திற்கும், துன்பத்திற்கும் ஆளாகி உள்ளனர். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு வர வேண்டும். தேவைபட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story