மதுக்கடை திறப்பதை எதிர்த்து வழக்கு: அரசின் அதிகாரத்தில் தலையிட முடியாது


மதுக்கடை திறப்பதை எதிர்த்து வழக்கு:  அரசின் அதிகாரத்தில் தலையிட முடியாது
x
தினத்தந்தி 15 Aug 2017 3:45 AM IST (Updated: 15 Aug 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

குடியிருக்கும் வீட்டிற்கு அருகே மதுபானக்கடை திறக்கக்கூடாது என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

சென்னை,

குடியிருக்கும் வீட்டிற்கு அருகே மதுபானக்கடை திறக்கக்கூடாது என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘மதுபான சில்லரை விற்பனை விதிகளில், குடியிருக்கும் வீட்டிற்கு அருகே மதுபானக்கடை திறப்பதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால், வீட்டிற்கு அருகே மதுபானக்கடையை திறக்க தடைவிதிக்கும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டில் மனுதாரர் முறையிட்டுள்ளார். இந்த ஐகோர்ட்டு, சட்டத்தை இயற்றும் சட்டசபை இல்லை. எனவே, இதுபோன்ற விதிகளை, சட்டத்தை இயற்றுவது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தில், இந்த ஐகோர்ட்டு தலையிட முடியாது. இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.


Next Story