அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம்


அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 18 Aug 2017 2:19 PM GMT (Updated: 18 Aug 2017 2:19 PM GMT)

அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,


அதிமுக அணிகள் இணைவது குறித்த அறிவிப்பை இரு அணியினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருதரப்பினரும் சந்தித்து, அணிகளும் இணைய உள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேசுகையில்,  பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல் என்று யாரும் கிடையாது. அணிகள் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது என்றார். 


Next Story