எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி - டிடிவி தினகரன்; விளம்பரம் - மு.க.ஸ்டாலின் பேட்டி


எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி - டிடிவி தினகரன்; விளம்பரம் - மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 12 Sept 2017 2:12 PM IST (Updated: 12 Sept 2017 2:12 PM IST)
t-max-icont-min-icon

திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி எனக்கூறி டிடிவி தினகரன் விளம்பரம் தேடப்பார்க்கிறார் என மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார்.


சென்னை,


சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது. அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது என சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் பேசுகையில், இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றார். தேர்தலில் நிற்க சில அமைச்சர்களுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது, தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி இருக்கும். திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஜெயலலிதா அமர்ந்த முதல்-அமைச்சர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை எங்களால் பார்க்க முடியவில்லை என குறிப்பிட்டார். 

 டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்று உள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி எனக்கூறி விளம்பரம் தேடப்பார்க்கிறார். டிடிவி தினகரனுக்கு விளம்பரம் தேடித் தர நான் விரும்பவில்லை என கூறிவிட்டார். 


Next Story