139-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு நாளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை


139-வது பிறந்த நாள்: பெரியார் சிலைக்கு நாளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
x
தினத்தந்தி 15 Sep 2017 9:23 PM GMT (Updated: 2017-09-16T02:52:50+05:30)

அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை,

தந்தை பெரியாரின் 139-வது பிறந்த நாளான 17-9-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று (நாளை) காலை 8 மணியளவில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள அவரது சிலைக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சி தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story