சென்னையில் பரவலாக மழை


சென்னையில் பரவலாக மழை
x
தினத்தந்தி 16 Oct 2017 4:46 PM IST (Updated: 16 Oct 2017 4:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை,


தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதம் ஆக அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னை வானமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வெயில் வாட்டிய நிலையில் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது.  

Next Story