போயஸ் கார்டன் சோதனைக்கு காரணம் சசிகலா குடும்பமே - அமைச்சர் ஜெயக்குமார்


போயஸ் கார்டன் சோதனைக்கு காரணம் சசிகலா குடும்பமே - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 18 Nov 2017 11:41 AM IST (Updated: 18 Nov 2017 11:41 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வருமான வரி சோதனைக்கு காரணம் சசிகலா குடும்பமே என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒன்றரை கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவரது வீட்டை கட்சியினர் கோவிலாக மதித்து வணங்கி வருகிறோம். கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டிருப்பது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

ஜெயலலிதா கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர்; அவரது இல்லத்தில் சோதனை வேதனை தருகிறது. போயஸ் கார்டனில் சோதனை நடக்க தினகரன் குடும்பம்தான் காரணம். வருமான வரி சோதனையை திசைதிருப்பி ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story