ஆர்.கே.நகர் தோல்வி எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை கூட்டம்


ஆர்.கே.நகர் தோல்வி எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2017 6:28 AM GMT (Updated: 25 Dec 2017 6:28 AM GMT)

ஆர்.கே.நகர் தோல்வி எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்து விவாதிக்க அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது  

தினகரன் ஓரங்கட்டப்பட்டது முதல், பழனிசாமி அணியில் தனது ஆதரவாளர்கள் சிலீப்பர் செல்களாக இருக்கிறார்கள் தேவையான நேரத்தில் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் தொடர்ச்சியாக கூறிவந்தார். அவரது ஆதரவாளர்களாக வெற்றிவேல், புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் சிலீப்பர் செல்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதை உறுதிப்படுத்துவது போல, வாக்கு எண்ணிக்கையின்போது தினகரன் முன்னிலையில் இருந்தபோது அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. தினகரன் வெற்றி அறிவிக்கப்படும் முன்னரே, தினகரன் அணியிலிருந்து அதிமுகவிற்கு சென்ற செங்குட்டுவன் எம்பி, தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இச்சம்பவம் ஆட்சியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றியை அடுத்து பழனிசாமி-பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் அனைவரும் தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள் என தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதைக்கேட்டு எடப்பாடி பழனிசாமி-ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்து உள்ளது.

ஆர்.கே.நகரில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்தும் அணி தாவலை தடுப்பது குறித்தும் இன்று நடக்கும் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் 
கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Next Story