தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்


தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 16 Jan 2018 5:10 AM GMT (Updated: 2018-01-16T11:22:48+05:30)

தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்யப்படும் என டிடிவி தினகரன் புதுச்சேரியில் பேட்டி அளித்தார்.#TTVDhinakaran

புதுச்சேரி

டிடிவி தினகரன்  புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது;


 தனிக்கட்சி  தொடங்குவது தொடர்பாக நாளை எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் முடிவு செய்வோம். இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். என கூறினார். 

மேலும் அவர் கூறியதாவது:-

காவேரி நீரை மத்திய அரசால் மட்டுமே தமிழகத்துக்குத் தர முடியும், தமிழக அரசு கேட்கத்தான் முடியும், அவர்களைக் குறைகூற முடியாது. 

மழை நீரை சேமித்துவைத்திருப்பதாக ஆளுநர் உரையில் பொய் சொல்லி உள்ளது தமிழக அரசு. பயிர்கள் வாடிவரும் நிலையில், காவேரி நீரை தமிழகத்துக்கு மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். 

குருட்டு அதிர்ஷ்டத்தில்  எடப்பாடி பழனிசாமி முதல்வரானதால் காவேரி நீரை தமிழகத்துக்குப் பெற மத்திய அரசிடம் கோரிக்கைதான் வைக்க முடியும். 

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வரும். இரட்டை இலை தவறானவர்கள் கையில் சிக்கியுள்ளது. அ.தி.மு.க-வின் சட்ட திட்டத்தின்படி பெரும்பான்மையான தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்கள் எனப் பார்க்காமல், தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கியதற்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் எனக்கு வெற்றியைத் தந்து நிரூபித்துள்ளனர். ஒன்றரைக் கோடி தொண்டர்களின் எண்ணத்தை ஆர்.கே. நகர் மக்கள் பிரதிபலித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்


Next Story