இனி ஒரு போதும் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது விஜயகாந்த் சொல்கிறார்


இனி ஒரு போதும் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது  விஜயகாந்த் சொல்கிறார்
x
தினத்தந்தி 24 April 2018 8:20 AM GMT (Updated: 24 April 2018 8:20 AM GMT)

இனி ஒரு போதும் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். #Vijayakanth

சென்னை

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி  அளித்த  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அதில் கூறி  இருப்பதாவது:-

,காவிரி விவகாரத்தில் திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என எழுப்பிய கேள்விக்கு, காவிரி விவகாரம் குறித்த  அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் தான் முதல் ஆளாக பங்கு பெற்றிருப்பேன்.அனைத்து ஆலோசனை கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே நடைபெறுகிறது.  அத்தகைய கூட்டங்களில் தாங்களும் கலந்து கொண்டு அவர் புகழ்பாட  வேண்டுமா  ஸ்டாலின் என்ன கருணாநிதியா?

மு.க.ஸ்டாலினை  எனக்கு எப்போதும் பிடிக்காது. தமது மனசாட்சி அவரை ஏற்றுக் கொண்டதில்லை.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக விரும்பியதாகவும், 40 தொகுதிகள் தர திமுக தயாராக இருந்தது.   அதிகாரப் பகிர்வு என்ற நிபந்தனைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை.  அது நடந்து இருந்தால் இப்போது நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். இனி ஒரு போதும் மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக முடியாது

மற்றவர்கள் கருணாநிதியை சென்று சந்திப்பதற்கு முன்னரே, தான் சந்திக்க விரும்பினேன் .  அதற்கு மு.க.ஸ்டாலினிடம் இதுகுறித்து பேசுமாறு பதில் வந்தது.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்தவர்கள் தற்போது ஸ்டாலினுடன் இருப்பது குறித்து விஜயகாந்த் கூறுகையில், அவர்கள் தம்மை முதல்வராக்கி விடுவார்கள் என ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

கமல்ஹாசனின் அரசியல் நுழைவு  பின்னணியில் திமுக இருக்கலாம்  . தமிழகத்தில் பாரதீய ஜனதா காலூன்ற வாய்ப்பே இல்லை என விஜயகாந்த் கூறி உள்ளார்.

Next Story