யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும் ! அமைச்சருக்கு கமல்ஹாசன் பதிலடி

என்னை சிலர் எறும்பு எனக்கூறுகிறார்கள், ஆனால், யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும், என அமைச்சருக்கு கமல்ஹாசன் பதில் அளித்து உள்ளார். #KamalHaasan #Jayakumar #MakkalNeedhiMaiam
சென்னை
சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்
கமல் எங்கே இருக்கிறார்? அவர் திடீரென்று ட்விட்டரில் வருவார். இல்லை என்றால் பேஸ்புக்கில் வருவார்; யூட்யூபில் வருவார். பார்த்துக் கொண்டே இருங்கள். இனிமேல் எஸ்.எம்.எஸ்ஸில் தான் வருவார்.
சுருக்கமாக சொல்வதென்றால் என்னமோ தேய்ந்து கட்டெறும்பு ஆனது என்பார்களே. அதுபோல கமல் கட்டெறும்பிலிருந்து சிற்றெறும்பாகி பின்னர் அரசியலில் காணாமலே போய் விடுவார். எனக்கூறினார்.
இதற்கு பதில் அளித்து மக்கள் நீதி மய்யா தலைவர் கமல்ஹாசன் கூறும் போது
என்னை சிலர் எறும்பு எனக்கூறுகிறார்கள், ஆனால், யானை காதில் எறும்பு புகுந்தால் என்னவாகும், எனவே, வார்த்தை ஜாலங்களில் நுழையாமல் செயல்படுவோம் என கூறினார்.
Related Tags :
Next Story