காவிரி விவகாரம்; சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்
சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் காவிரி விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வருகிற 22ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
காவிரி வரைவு செயல்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நதிநீர் பங்கீட்டினை அமல்படுத்தும் முழுப்பொறுப்பு ஆணையத்திற்கே உண்டு என்றும் குறிப்பிட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காவிரி விவகாரம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள வருகிற 22ந்தேதி காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றன. இந்த கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
Related Tags :
Next Story