தஞ்சை பெரிய கோயிலில் திருடு போன ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் மீட்பு


தஞ்சை பெரிய கோயிலில் திருடு போன ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் மீட்பு
x
தினத்தந்தி 30 May 2018 3:35 AM GMT (Updated: 30 May 2018 3:35 AM GMT)

தஞ்சை பெரிய கோயிலில் திருடு போன ராஜராஜ சோழன் சிலை குஜராத்தில் மீட்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தின் தஞ்சை பெரிய கோவிலில் சோழ மன்னன் ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் இருந்தன.  கடந்த 60 வருடங்களுக்கு முன்பு இந்த சிலைகள் திருட்டு போயின.

இதன் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.  இந்த நிலையில் சிலை திருடு பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டு உள்ளது.  வழக்கு பதியப்பட்ட 90 நாட்களில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு நடவடிக்கை மேற்கொண்டு சிலைகளை மீட்டுள்ளது.

கொள்ளையர்கள், போலி சிலைகளை வைத்துவிட்டு 2 சிலைகளையும் திருடி சென்றுள்ளனர்.  குஜராத்தில் மீட்கப்பட்ட சிலைகள் ரெயில் மூலம் நாளை சென்னை வந்தடையும்.

Next Story