மேகதாது அணை விவகாரம்; அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர் நாளை ஆலோசனை


மேகதாது அணை விவகாரம்; அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர் நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 4 Dec 2018 8:34 PM IST (Updated: 4 Dec 2018 9:08 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை விவகாரம் பற்றி அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் நாளை மாலை ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னை,

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் பற்றி அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நாளை மாலை ஆலோசனை நடத்துகின்றனர்.

Next Story