பிளஸ் 2 தேர்வு; மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோவில் வாழ்த்து


பிளஸ் 2 தேர்வு; மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோவில் வாழ்த்து
x
தினத்தந்தி 1 March 2019 10:32 AM IST (Updated: 1 March 2019 10:32 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு துணை முதல் அமைச்சர் ஆடியோ வழியே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 8¾ லட்சம் பேர் எழுதுகிறார்கள்.

2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு  இன்று தொடங்கி வருகிற 19ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7 ஆயிரத்து 82 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவர்கள் மற்றும் பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும், புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்கள்) 1,144 தனித்தேர்வர்கள் என மொத்தத்தில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  இதில் சிறப்புடன் தேர்வினை எழுதுவதற்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story