அணைகளை தூர்வாரி பராமரிக்க ஆன செலவு பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


அணைகளை தூர்வாரி பராமரிக்க ஆன செலவு பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
x
தினத்தந்தி 14 March 2019 2:40 PM IST (Updated: 14 March 2019 2:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க கடந்த 10 ஆண்டுகளாக செலவிட்ட தொகை பற்றி பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை,

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதிகள் இன்று கூறும்பொழுது, தமிழக அணைகளை தூர்வாரி பராமரிக்க கடந்த 10 ஆண்டுகளாக செலவிட்ட தொகை பற்றி பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை செயலர், தலைமை பொறியாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளனர்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், அதனை பயன்படுத்தி அணைகளை தூர்வார வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் அனைத்து வளங்கள் இருந்தும் அதை பாதுகாக்க அதிகாரிகள் தவறியதால் பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேற்று வேதனை தெரிவித்து இருந்தனர்.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாருங்கள் என தமிழக அரசுக்கு உத்தரவும் பிறப்பித்திருந்தனர்.  இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசுக்கு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

Next Story