2019 தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக - காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து
2019 தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் உள்ள 9 தொகுதிகள் எவை என்பதை கண்டறிவதற்காக காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவினர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து துரைமுருகன் தலைமையிலான தி.மு.க. குழுவினரை சந்தித்து பேசினார்கள். அப்போது, சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது உறுதியானது என தகவல் வெளியாகியது.
மீதமுள்ள 5 தொகுதிகளை கண்டறிவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, மயிலாடுதுறை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய 8 தொகுதிகளில் இருந்து, 5 தொகுதிகளை தருமாறு காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க. ஒரு பட்டியலை வழங்கியது. தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது.
இப்போது இரு கட்சிகள் இடையிலான தொகுதி ஒப்பந்தம் தொடர்பாக கையெழுத்தாகியுள்ளது. போட்டியிடும் தொகுதிகள் விபரங்களை நாளை திமுக அறிவிக்கும் என சென்னை அறிவாலயத்தில் பேட்டியளித்த கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story