நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல; மண்ணின் மகள்: கனிமொழிக்கு தமிழிசை பதிலடி


நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல; மண்ணின் மகள்:  கனிமொழிக்கு தமிழிசை பதிலடி
x
தினத்தந்தி 11 April 2019 7:17 PM IST (Updated: 11 April 2019 7:17 PM IST)
t-max-icont-min-icon

நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல என்றும் இந்த மண்ணின் மகள் என்றும் கனிமொழிக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.  இதேபோன்று தி.மு.க. சார்பில் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார்.

இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல; நான் இந்த மண்ணின் மகள்.

நானும் எனது பெற்றோரும் தூத்துக்குடி தொகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.  இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என கனிமொழி கூறியதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்து உள்ளார்.

Next Story