தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம்; மு.க. ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் இல்லாத 8 வருடங்களில் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை,
சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தமிழக சட்டசபையின் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, தூத்துக்குடியின் வல்லநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பேசும்பொழுது, பிரதமராக வருவதற்கு முன்னர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என கூறினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பதவி பசி காரணமாக பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என கூறினார்.
இதுபற்றி பேசிய ஸ்டாலின், பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், அதனை திசை திருப்புவதற்காக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். 8 வருடங்களாக தி.மு.க. ஆட்சியில் இல்லாத நிலையில், மக்களுக்காக குரல் கொடுக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம் என கூறினார்.
Related Tags :
Next Story