தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தேர்தல் வெற்றியை கைகூப்பி ஏற்பதாக உருக்கம்


தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தேர்தல் வெற்றியை கைகூப்பி ஏற்பதாக உருக்கம்
x
தினத்தந்தி 23 May 2019 10:00 PM GMT (Updated: 2019-05-24T02:42:19+05:30)

தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து ‘டுவிட்டரில்’ தமிழிலும், ஆங்கிலத்திலும் இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இதையடுத்து தமிழக மக்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து ‘டுவிட்டரில்’ தமிழிலும், ஆங்கிலத்திலும் இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார். தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதேபோல் அவர் வெளியிட்ட ஆங்கில பதிவில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த மகத்தான வெற்றியை கூப்பிய கரங்களுடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலின் போது நாங்கள் அளித்த வாக்குறுதிகளை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையிலும், மாநில நலனை பாதுகாக்கும் வகையிலும் கடுமையாக உழைப்போம் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story