தி.மு.க. சார்பிலான வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது


தி.மு.க. சார்பிலான வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 3 Jun 2019 7:22 PM IST (Updated: 3 Jun 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பிலான வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது.

சென்னை,

நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.  இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது.  இதனுடன் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழாவும் இணைந்து கொண்டாடப்படுகிறது.

இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது.  இதனை முன்னிட்டு பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளது.  தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கி.வீரமணி, வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், காதர்மொய்தீன், பாரிவேந்தர், ஈஸ்வரன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

Next Story