கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிக்கும் மையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் -மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிக்கும் மையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முற்றிலும் மாறாக, கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்க மத்திய பா.ஜனதா அரசு திட்டமிடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூடங்குளம் அணுஉலை தொடர்பான வழக்கில் 6.5.2013 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 15 கட்டளைகளைப் பிறப்பித்து அவற்றை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அணு உலையை செயல்படுவதற்கு அனுமதித்தது. “அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான (Away From Reactor- AFR) வசதியை 5 ஆண்டுகளில் ஏற்படுத்திட வேண்டும்” என்பது அவற்றுள் மிக முக்கியமான நிபந்தனை.
“2022-ம் வருடத்திற்குள் எ.எப்.ஆர் கட்டி முடித்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ள நிலையில், கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே எ.எப்.ஆர் கட்டுவதற்கு வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரத்தில் பொதுமக்கள் “கருத்துக் கேட்புக் கூட்டம்” நடைபெறும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகவும் இருக்கிறது.
இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, அ.தி.மு.க. அரசின் கீழ் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே அறிவித்திருப்பதிலிருந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து அணுக் கழிவுகளினால் விளையும் ஆபத்தை உரிய காலத்தில் தடுத்திட மத்திய பா.ஜ.க. அரசு தவறியதோடு மட்டுமில்லாமல்- மாநில அதிமுக அரசும் இதில் அலட்சியத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் நன்கு நினைவில் கொண்டு மக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க கூடங்குளம் வளாகத்திற்குள்ளேயே எ.எப்.ஆர் கட்டும் முடிவினை உடனடியாக கைவிட்டு வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story