கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் -சி.பி.ராதாகிருஷ்ணன்
கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் என பாரதீய ஜனதா முன்னாள் அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார்.
கோவை,
திமுக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மத்திய கயிறு வாரியத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டாலின் வெற்றித்தளபதி, அவரது உழைப்பு என்னை போன்ற பலரை இன்னும் உழைக்க வேண்டும் என உணரச்செய்துள்ளது. உழைப்பின் முலம் ஸ்டாலின் எங்களை வீழ்த்தி விட்டார். கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார். ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என்று கூறினார்.
திமுகவும், பாஜகவும் எதிரும் புதிருமாக அரசியல் செய்து வரும் சூழலில் மு.க.ஸ்டாலினை பாஜகவை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் உயர்த்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story