மாநில செய்திகள்

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அதிமுக + "||" + Avoid placing banner, its disrupt people: AIADMK

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அதிமுக

மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்: அதிமுக
மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
சென்னை,

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று  தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில்,  மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுக  அறிவித்துள்ளது. 

"கட்சி நிகழ்ச்சிகளில், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது.  கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அறியாமையால் சிலர் செய்யும் செயலால் மக்கள் பாதிப்படைவதால் மிகுந்த வேதனை அடைகிறோம். தலைமையின் அறிவுறுத்தலை கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று கட்சியினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்கள் கட்சியில் இருந்து நீக்கம்
விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கலியபெருமாள், முருகன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
2. அதிமுக எம்பிக்கள் சிஏஏவை ஆதரித்து வாக்களித்ததால் தான் நாடு முழுவதும் கலவரம்- மு.க.ஸ்டாலின்
அதிமுக எம்பிக்கள் சிஏஏவை ஆதரித்து வாக்களித்ததால் தான் நாடு முழுவதும் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
3. அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4. அதிமுகவினர் தனது தந்தையை கடத்தியதாக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.15,000 அபராதம்
திமுக கவுன்சிலரான தனது தந்தையை அதிமுகவினர் கடத்தியதாக வழக்கு தொடர்ந்தவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரூ.15,000 அபராதம் விதித்துள்ளது.
5. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் காலமானார்
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமானார்.