மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு


மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு
x
தினத்தந்தி 1 Jan 2020 6:53 PM IST (Updated: 1 Jan 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

வடகிழக்கு பருவமழை பெய்து வந்ததன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி டெல்டா பகுதியில் மழை குறைந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. 

இதனால் தற்போது மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் வினாடிக்கு 10,600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து வினாடிக்கு 1,926 கன அடியாக உள்ளது.

அணையின் நீர்மட்டம் 118.63 அடியாக உள்ளது. மேலும் அணையில் தற்போது 91.302 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

Next Story